ஏ. எம். ஜெயின் கல்லூரியில், மதிப்புமிகு கல்லூரி டீன் டாக்டர் எம்.எம்.ரம்யா அவர்களுடன்
- thirukkuralmaamalai
- Oct 22, 2023
- 1 min read
ஏ. எம். ஜெயின் கல்லூரி (A.M. Jain College) என்பது தமிழ்நாட்டின், மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1952 ஆம் ஆண்டு எஸ். எஸ். ஜெயின் கல்விச் சங்கத்தால் துவக்கப்பட்டது. இங்கு கலை, அறிவியல், காட்சி ஊடகப் படிப்புகளுடன் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்புகளை வழங்கப்படுகிறது. இக்கல்லூரி வளாகமானது மீனம்பாக்கம் ரயில் நிலையத்தின் எதிரே அமைந்துள்ளது. இக்கல்லூரி சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைவு பெற்றுள்ளது.
இந்தக் கல்லூரியில் திருக்குறள் மாநாடு, திருக்குறள் கருத்தரங்கம், திருக்குறள் கூட்டங்கள் நடத்துவது பற்றியும் மாணாக்கர்களை உறுப்பினர்களாக சேர்ப்பது பற்றியும், மதிப்புமிகு கல்லூரி டீன் டாக்டர் எம்.எம்.ரம்யா அவர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது. அனைத்து ஏற்பாடுகளையும் உடனிருந்து செய்து கொடுத்தார் தமிழ் துறைத் தலைவர் டாக்டர் கோதண்டராமன் அவர்கள்.
A.M. Jain College of Arts and Science college in Meenambakkam, Tamil Nadu. This college was established in 1952 by S. S. Initiated by the Jain Education Society. Arts, Science, and Visual Media courses along with Information Technology courses are offered here. The college campus is located opposite the Meenambakkam railway station. The college is affiliated to Madras University.
A discussion was held with the esteemed college dean Dr. M.M. Ramya about conducting Thirukkural conference, Thirukkural seminar, Thirukkural meetings, and enrolling students as members from this college. Dr. Kothandaraman, Head of the Tamil Department, was present and made all the arrangements.


Comments